Weather
மிதமான மழைக்கு இன்று வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் சில இடங்களில், இடி,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல், காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




