Arts, culture, entertainment and media
“15 முதல் 20 படங்களை பார்த்திருக்கிறேன், ஆனால்...” - வியப்புடன் பாராட்டிய வெற்றிமாறன்

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குக்கிடையிலான படகுப்போட்டியை முக்கிய கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் படத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வர திரையரங்குகளில் கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வெற்றிமாறன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்து என்னுடைய உதவி இயக்குநர்கள் படம் பண்ணும் வரைக்கும் கிட்டத்தட்ட 15 முதல் 20 திரைப்படங்களின் வசூல் நிலவரங்களை மிக நெருக்கமாகக் கவனித்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் இதுதான். இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
இந்த படம் ஆடியன்ஸோடு நன்றாக ஒத்துபோகிறது. தமிழில் மட்டும் இல்லை, தெலுங்கிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். குறிப்பாக மதிமாறனுக்கு, இவ்வளவு அர்ப்பணிப்போடு உழைப்பதற்கு நிறைய தைரியம் வேண்டும். அதே போல் சூரி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் எனது வாழ்த்துக்கள்” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)