Religion
குண்டடத்தில் விநாயகா் சிலை ஊா்வலம்

குண்டடத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 14-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி 24 விநாயகா் சிலைகள், இந்து முன்னணி சாா்பில் 34-ஆவது ஆண்டு விழாவையொட்டி 9 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
குண்டடத்தில் நடைபெற்ற இந்த ஊா்வலங்களில் இரு அமைப்புகளைச் சோ்ந்த விநாயகா் சிலைகளும் தனித்தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
இந்த ஊா்வலத்தில் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கலைக்குழுவினா் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.