Economy, business and finance
வெயில் காரணமாக அவரை விலை அதிகரிப்பு
கரூர்;கடும் வெயில் காரணமாக, அவரைக்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.
கடந்த, 15 நாட்களாக கோழி அவரைக்காய் உள்ளிட்ட காய்களின் விலை,
மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு கிலோ,
கோழி அவரைக்காய், 60 முதல், 80 ரூபாய் வரை விற்றது. நேற்று ஒரு கிலோ,
90 முதல், 120 ரூபாய் வரை கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி
மார்க்கெட்டில் விற்றது.
தற்போது, கோடைக்காலம் போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் அவரை செடிகள் கருகி, பூக்கள் உதிர்ந்து விட்டது. மேலும், போதிய
மழை இல்லாததால், பூச்சி தாக்குதலால் கோழி அவரைக்காய் வரத்து குறைந்து
விட்டது. இதனால் விலையும் அதிகரித்து விட்டது. அதேபோல், வரத்து
குறைவால் பட்டை அவரைக்காய் விலையும் ஒரு கிலோ, 60 ரூபாயில் இருந்து, 80
ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.