Politics
சேந்தையில் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டி
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி நடந்து

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வட்டார அளவிலான கலைத்திருவிழா
போட்டி நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர் குமரேசன், போட்டிகளை தொடங்கி
வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை
வகித்தார். இப்போட்டியில், 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ,
மாணவியருக்கு நடனம், ஓவியம், மணல் சிற்பம் அமைக்கும் போட்டி என, 18
வகையான போட்டிகளில், 220 பேர் பங்கேற்றனர்.
வெற்றிபெறும் மாணவர்கள், நாமக்கல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
போட்டியில் கலந்துகொள்வர். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர், மாநில
அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். மாநில அளவில்
வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.