Politics
வட்டார கலைத்திருவிழா போட்டிகள் 1,050 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி:வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில், 1,050 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில், 1 முதல், 8ம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டி கள் நேற்று, கிருஷ்ணகிரி
புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார வள மைய
மேற்பார்வையாளர் அசோகன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர்
பயிற்றுனர் ரமேஷ்குமார் போட்டி விதிமுறைகள் குறித்து விளக்கினார்.
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், குறுவள மைய அளவில் முதலிடம் பெற்ற, 1
முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியர், 350 பேரும், 6 முதல், 8ம் வகுப்பு
மாணவ, மாணவியர், 700 பேரும் என மொத்தம், 1,050 மாணவ, மாணவியருக்கு,
வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி நடந்தது.
சிற்பம், நடனம், கதை, பாட்டு, ஓவியம், ஒப்புவித்தல் ஆகிய தலைப்புகளின்
கீழ் போட்டிகள் நடந்தது. வட்டார அளவில் முதலிடம் பெறும் மாணவ,
மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வட்டார
அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.
சாந்தி, தமிழ்தென்றல், அம்பிகா, செல்வி, நளினா, அனுஷா, ரமணி, திவ்யா,
தமிழரசு மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ரமேஷ், ஜித்தன்
ஆகியோர் செய்திருந்தனர்.