பள்ளத்தில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நீண்ட சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் விஜயராஜன், 27; இவர் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பாலி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விஜயராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.