பைக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலி
செங்கல்பட்டு, செப். 12-– செங்கல்பட்டில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் வினோத் குமார், 44, என்பவர்
செங்கல்பட்டில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் வினோத் குமார், 44, என்பவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அடுத்த வேதநாரயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்; கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு, ‘ஹீரோ ஸ்பிளெண்டர்’ இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்த களத்தூர் நோக்கி சென்றார்.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் எதிரே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து வினோத் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வினோத் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.