Economy, business and finance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திருச்சி:திருச்சியில், மின் கம்பத்தில், விளக்கு பழுது நீக்கிய போது, தொழிலாளி ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருச்சி, ஆலந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளம்பட்டியில், தெரு மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.
ஊராட்சி நிர்வாகப் பணியாளர் ஒருவர், விராலிமலையை சேர்ந்த கருப்பையா, 42, என்பவரை அழைத்து வந்து, மின் விளக்குகளை பழுது பார்க்கச் சொல்லி உள்ளார். அவர், மின் கம்பத்தில் ஏறியப்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மணிகண்டம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.