Economy, business and finance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மதுரவாயல்: ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ், 30; பால் 'சீலிங்' அமைக்கும் வேலை செய்து வந்தார்.
மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள 'எஸ்.எஸ்., ஹைதராபாத் பிரியாணி' கடையின் இரண்டாவது மாடியில் பால் சீலிங் அமைக்கும் பணிக்காக, சக தொழிலாளர்களுடன் நேற்று சென்றார்.
பால் சீலிங்கில் பயன்படுத்தப்படும் அலுமினிய கம்பிகளை கீழ்தளத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக கொண்டு சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக, கட்டடத்தின் அருகே சென்ற மின்சார கம்பியில் அலுமினிய கம்பி உரசியது. இதில் முகமது ரியாஸ் மீது மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார்.
சக தொழிலாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் முகமது ரியாஸ் உயிரிழந்தது தெரிந்தது.
தகவல் அறிந்து சென்ற மதுரவாயல் போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.