Arts, culture, entertainment and media
Soori | “இந்த படத்தின் வெற்றியை மீனவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்” - ‘மண்டாடி’ குறித்து நடிகர் சூரி!

‘மண்டாடி’ படத்தின் வெற்றியை கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கு சமர்பிக்கிறேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இப்போது படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இது எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த படம் வெற்றிபெறும் என மன உறுதியுடன் தான் நாங்கள் பல மாதங்களாக கடலுக்குள் கிடந்தோம். கஷ்டப்பட்டோம் என்ற வார்த்தையை பலரும் சொல்ல வேண்டாம் என கூறுகிறார்கள்.
உண்மையில் கஷ்டப்பட்டதால் தான் இந்த வார்த்தையை நாங்கள் கூறுகிறோம். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பை பார்த்தேன். திரையரங்குகளில் மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றியை கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சமர்பிக்கிறோம். இது அவர்களுக்கான திரைப்படம். மீனவனாக நான் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.
மதிமாறன் இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மண்டாடி’. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
