Arts, culture, entertainment and media
இப்போது கதாநாயகன்... அடுத்து அரசியலா? - நடிகர் சூரி கொடுத்த பதில்!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரியிடம் அரசியலுக்கு வருவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்ன?.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி காமெடியனாக மாறி தொடர்ந்து வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்த சூரி, கருடன், கொட்டுக்காளி, மாமன் என அடுத்தடுத்து பரிணமித்து வருகிறார். அந்த வகையில், மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
