Religion
இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கோலாகலம்

சேலம்; சேலம் இஸ்கான் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்-டமி விழா, சோனா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு ஆரத்தி, யக்ஞம், பஜனை, கிருஷ்ண கதா, குருகுல மாண-வர்களின் ஜராசந்தன் முக்தி மற்றும் சிசுபாலன் வதம் நாடகம், ஹரே கிருஷ்ணா படம் காண்பிக்-கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீரங்கம் பெரியகோவில் வீணை சீனிவாசன் சீடர்களின் வீணை கச்சேரி, கும்ப-கோணம் சங்கரராமன் குழுவினரின் பாட்டு கச்சேரி, சேலம் இஸ்கான் கோவில் திருப்பணி பற்றிய தொகுப்பு பிரசங்கம், 3 முதல், 11 வயது வரையான குழந்-தைகளுக்கு கிருஷ்ணர் வேட போட்டி நடந்தன.
மேலும் கிருஷ்ண பலராமரின் விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி, கீர்த்-தனம் தொடர்ந்து நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு மகா ஆரத்தி நடந்தன. மாலை, 5:30 மணிக்கு, ஜோேஹா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஸ்ரீதர்-வேம்பு, நடிகை கவுதமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர். பக்-தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்-பட்டன. விழா பந்தலில் அமைக்கப்பட்டிருந்த ஆன்மிக புத்தக அரங்கு உள்ளிட்டவைகளை, பக்-தர்கள் பார்வையிட்டனர்.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ருக்-மணி சத்யபாமாவுடன் ராஜ அலங்காரத்தில் கிருஷ்ணர் காட்சியளித்தார். அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில், தொட்டிலில் கிருஷ்ணர் அலங்க-ரித்து வைக்கப்பட்டார். அங்கு கிருஷ்ணரை சுற்றி, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து, சிறுவர், சிறுமியர் தரிசனம் செய்தனர்.
பனமரத்துப்பட்டி, நத்தமேடு சென்னகேசவ சென்-றாய பெருமாள் கோவிலில், கண்ணன், ராதை வேடமணிந்த ஏராளமான சிறுவர்கள், பக்தி பாடல் பாடி நடனம் ஆடினர். உறியடி நிகழ்ச்-சியில் சிறுவர்கள், திறமைகளை வெளிப்படுத்-தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி, சத்தியநாராயணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
தாரமங்கலம், பெரிய காடம்பட்டி, தேவ கிருஷ்ணா கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின் மலர் அலங்காரம் செய்து, இனிப்பு, காரம், பழங்கள் வைத்து தீபாரா-தனை காட்டப்பட்டது. மேலும் கோவில் வளா-கத்தில் சிறு தேரில் உற்சவமூர்த்தி கிருஷ்ணரை எழுந்தருளச்செய்து, தேர்
பவனி, கோலாட்டம் நடந்தது. மதுரை ருத்ர நாட்-டிய கலைக்கூடம், ஸ்ரீலாஸ்ய நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏராள-மான பக்தர்கள் தரிசித்தனர்.
மேச்சேரி, வெள்ளாறு, வசந்தம்நகர் ராமபக்த ஆஞ்ச
நேயர், விஸ்வரூப அலங்காரத்தில் அருள்பா-லித்தார். மேலும் அந்த ஆஞ்சநேயர் ஆலய வளா-கத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு அலங்காரம் செய்து பழங்கள் வழங்கப்பட்டன.
ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு அபிேஷக பூஜை செய்யப்பட்டது.
பின், பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் மற்றும் கிருஷ்ணர் சுவாமிகள், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
அதேபோல் ஆத்துார், கூட்ரோடு ரங்கநாதர், தலைவாசல் கரிவரதராஜர், வீரகனுார் கஜவரத-ராஜர், புத்துார் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கோகுலாஷ்டமி பூஜை நடந்தது.
பக்தர்களுக்கு வெண்ணெயால் செய்யப்பட்ட சீடை, இனிப்பு வகைகள், பிரசாதமாக வழங்கப்-பட்டன.