Economy, business and finance
சிக்கன் சென்டரில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடத்தில், சிக்கன் சென்டரில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோவில் அருகே, ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 54. ஒரகடத்தில் உள்ள சிக்கன் சென்டர் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கோழி சுத்தம் செய்யும் இயந்திரத்தில், கோழியை சுத்தம் செய்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.