Politics
எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு மீதான நடவடிக்கை என்ன? சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் பதி...

எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் விளக்கமளித்தார்.
எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தவெக ஆட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியால், அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து இசக்கி சுப்பையாவும் செயல்பட்டார்.
அதைத் தொடர்ந்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை சபாநாயகரிடம் நேரில் சென்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், சென்னை பனையூரிலுள்ள தவெக தலைமையகத்திற்குச் சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது தவெகவின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள இசக்கி சுப்பையா, சட்டப்பேரவை செயலரிடம் தான் வழங்கிய ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார். அதில், தனது ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
