Crime, law and justice
லாரியிலிருந்து விழுந்த இரும்பு அச்சு ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் பலி

சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி தேசிய நெடுஞ்சாலையில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட தொழிலக பயன்பாட்டுக்கான இரும்பு அச்சு மோதியதில், டூவீலரில் சென்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் நேற்று காலை சித்தாலங்குடி ஜல்லிக்கட்டு வீரர்கள் பூமாலை மகன் கோபாலகிருஷ்ணன் 27, முத்தையா மகன் அய்யனார் 26, டூவீலரில் சென்றனர்.
அப்போது முன்னே சென்ற கனரக லாரியிலிருந்து தொழிற்சாலை பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்ட இரும்பு அச்சு நழுவி டூவீலர் மீது உரசி விழுந்தது.
இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இருவருக்கும் திருமணமாகவில்லை.
கோபாலகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 3 வது சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.