Religion
மாவட்டம் முழுவதும் 1,780 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்-னிட்டு, 1,780 இடங்களில் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
நாடு முழுவதும் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஹிந்து முன்னணி சார்பில், 1,780 இடங்களில் விநா-யகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். ஓசூர் பகுதியில் மட்டும், 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்-பட்டிருந்தன. கிருஷ்ணகிரி நகரில், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 83 இடங்களில் சிலை வைத்து வழிபட்டனர். பக்தர்கள், தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கொழுக்-கட்டை, சுண்டல், பொங்கல் படைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாவட்டம் முழுவதும், 1,000-க்கும் மேற்-பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் சாலையில், ஹிந்து முன்னணி சார்பில், 12வது ஆண்டாக, 10 அடி உயர விநாயகர் சிலை வைத்து, நேற்று காலை சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகரின் கண் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் கலைகோபி, நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொது செயலாளர் புஷ்பராஜ், ஆர்.எஸ்.எஸ்., நாகராஜ் சைலா நடேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
ஓசூரில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஓசூர், சூளகிரி, பாகலுார், பேரிகை, மத்திகிரி, சிப்காட், ஹட்கோ, நல்லுார் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 723 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடு-களில் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர்.ஓசூர் ராயக்கோட்டை சாலையில், சீனிவாசா தியேட்டர் எதிரே, கஜமுக சூரனை வதம் செய்வது போன்ற தோற்றத்தில் விநாயகர் சிலை பிரமாண்ட செட்டில், பிரதிஷ்டை
செய்துள்ளது பொதுமக்களை கவர்ந்துள்ளது. ஓசூர் ஸ்ரீநகரில், டாக்டர்கள் போல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்-டுள்ளன.
தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை, உத்த-னப்பள்ளி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 247 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கெலமங்கலத்தில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை, 3வது நாளிலிருந்து, 9வது நாள் வரை கரைக்க உள்ளனர். சின்-னட்டி அருகே சனத்குமார் நதியில் கரைக்க, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 5 அடிக்கு மட்டுமே நதியில் நீர் உள்ளதால், பெரிய சிலைகளை கரைக்க முடியாது. அதனால், ஆழமாக தோண்டி, அதில் நீர் நிரப்பி, சிலைகளை முழுமையாக கரைக்க வேண்டும். மின் வசதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.