சாலையோர வியாபாரிகளுக்கு 9ல் கடன் வழங்கும் முகாம்
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவல-கத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு பிரத-மரின் சுப நிதி திட்டத்தில் கடன் வழங்கும் முகாம் வரும், 9 மதியம், 12:00 மணிக்கு நடக்க உள்ளது.
அதில் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முதல் தவணை, 15,000 ரூபாய், 2ம் தவணை, 25,000 ரூபாய், 3ம் தவணை, 50,000 ரூபாய் வழங்கப்படும்.முகாமில் பல வங்கிகளின் அலுவலர்கள் பங்-கேற்க உள்ளனர். அதனால் வியாபாரிகள், அடை-யாள அட்டை, மொபைல் எண் உள்ள ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், போட்டோ, ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம் என, பனமரத்துப்-பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்-ளது.