Sport
சர்வதேச டேபிள் டென்னிஸ் சென்னை அபினந்த் சாம்பியன்
சென்னை, செப்.11– துனிசியா நாட்டில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த, 18 வயது அபினந்த்
துனிசியா நாட்டில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த, 18 வயது அபினந்த் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் இருபாலருக்குமான யூத் கன்டெண்டர் டேபிள் டென்னிஸ் போட்டி, துனிசியாவின் துனிஸில் உள்ள ரேட்ஸ் அரங்கில் நடந்தது.
இதில் உலகின், 300க்கும் அதிகமான முன்னணி வீரர், வீராங்கனையர் போட்டியிட்டனர். இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த அபினந்த், 18 போட்டியிட்டார். 19 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் போட்டியிட்ட அவர், தனது அசத்தலான திறமையால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அபினந்த், ஸ்லோவாக்கியா நாட்டின் டேமியன் புளோரோவை எதிர்த்து மோதினார். இறுதிப் போட்டியில் அசத்திய அவர், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றியை பதிவு செய்து, சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.