25ம் தேதி வரை வியாபாரிகளுக்கு கடன் முகாம்
கோவை: மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை வியாபாரிகளுக்கு கடன் முகாம் மீண்டும் நடத்தப்படவுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வருகிற 7 முதல் 25ம் தேதி வரை சாலையோர வியாபாரிகளுக்கு கடன் முகாம் நடைபெறவுள்ளது. 5 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 முதல் மாலை 5 வரை முகாம் நடக்கும். சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என்றனர்.
காளப்பட்டி, உப்பிலிபாளையம், சேரன்மாநகர் வார்டு அலுவலகங்கள்
வடவள்ளி, கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், அண்ணா மார்க்கெட் வார்டு அலுவலகங்கள்
செல்வபுரம், போத்தனூர், குறிச்சி, கோவைப்புதூர் வார்டு அலுவலகங்கள்
ஆவாரம்பாளையம், காந்திமாநகர், சரவணம்பட்டி, துடியலூர் வார்டு அலுவலகங்கள்
காந்திபுரம், சிவானந்தாகாலனி, ரத்தினபுரி வார்டு அலுவலகங்கள்