Arts, culture, entertainment and media
சூரியின் படங்களில் இதுவே அதிக வசூல்; சாதனை படைத்த ’மண்டாடி’

சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மண்டாடி’. அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 10-ம் தேதி உலகமெங்கும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குக்கிடையிலான படகுப்போட்டி முக்கிய கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த படத்திற்கு, தொடர்ந்து அதிகரித்து வரும் ரசிகர்களின் பேராதரவால் திரையரங்குகள் அதிகரிக்கப்பாட்டுள்ளதாகப் படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் குவிந்து வருவதால், திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. எனவே, இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தான் சூரியின் படங்களில், முதல் 3 நாட்களில் மிக அதிகமான வசூல் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் மிகப்பெரிய வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)