நத்தத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம்:நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நேற்று நடந்தது. கண்காணிப்பு அலுவலர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். திண்டுக்கல் விற்பனை குழு செயலாளர் இளம்பூரணர் மேற்பார்வையில் ஏலம் நடந்தது. கொப்பரை தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ.155.90-க்கும் குறைந்தபட்சமாக ரூ.145-க்கும் ஏலம் போனது. தேங்காய் தொட்டி கிலோ அதிகபட்சமாக ரூ.36-க்கும் குறைந்தபட்சமாக ரூ.33-க்கும் ஏலம் போனது. கொப்பரை தேங்காய் 3800 கிலோ வரப்பெற்றதில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், உள்ளூர், வெளிமாவட்ட வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.