Politics
இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - எடப்பாடி பழனிசாமி
சென்னை,இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த

இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். மேலும் முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக முதல்-அமைச்சர் லண்டம் சென்றிருப்பதாக பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தொழில் ஈர்ப்பு குறித்து இன்னும் ஏதும் செய்திகள் வெளியாகவில்லை. அதன்பின் தான் அது குறித்து கருத்து கூற முடியும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.