Religion
உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உடுமலை சின்னவாளவாடி ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், விஷ்வக்சேன ஆராதனையுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. காலை, 10:30 மணிக்கு நவகலச திருமஞ்சனம், அலங்காரம், சாற்று முறை நடைபெற்றது.
தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீ வேணுகான பஜனை குழுவினரின் ராமசங்கீதனம் பஜனை நடந்தது. இரவு சுவாமி திருவீதி புறப்பாடு, உரியடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதே போல், பள்ளிவலசு ஸ்ரீராமர் கோவில், உடுமலை நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், ருத்தரப்பநகர் சித்தி விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.