Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் கண்காணிப்பாளர்கள், பணிக்குழு நியமனம்!

தவெக சார்பில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான கண்காணிப்பாளர்கள், பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ல் தேர்தல். அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார் கண்காணிப்பாளர்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் அமைச்சர்கள் அடங்கிய கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான தவெக இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பணிகளை கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
தாராபுரம் தொகுதிக்கான பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜை கட்சித் தலைமை நியமித்துள்ளது. இவருக்கு பக்கபலமாக இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தொகுதிகளில் எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய துணை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
