Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா
காஞ்சிபுரம், செப். 11– காஞ்சிபுரம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் கிருஷ்ண
காஞ்சிபுரம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், உறியடி விழாவும் நடைபெற்றன.
விழாவையொட்டி, காலையில் வேணுகோபால சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துாப, தீப ஆராதனைகள் கோலாகலமாக நடைபெற்றன.
மாலையில் உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.