விநாயகர் சிலை விசர்ஜனம்: செப்., 18 ல்போக்குவரத்து மாற்றம்
கோவை: விநாயகர் சதுர்த்திக்காக மாநகரில் 780, புறநகரில் 1,600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செப்.,16, 17 ல் விசர்ஜனம் நடக்கிறது. முத்தண்ணன் குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட பல குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
மாநகரில் செப்.,16, 276 சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. முத்தண்ணன் குளத்தில் 18ல் நடக்கும் விசர்ஜனத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18ம் தேதி காலை 7 முதல் இரவு 10 மணி வரை, மாநகரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் அரசு மேல்நிலை பள்ளி சந்திப்பில் இடப்புறம் திரும்பி சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் அடையலாம்.
உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடு செல்லும் வாகனங்கள், ஐந்து முக்கு, லங்கா கார்னர், ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம் வழியாக செல்லலாம்.
தடாகம் ரோட்டில் இருந்து ஜி.சி.டி., சந்திப்பில், இடதுபுறம் திரும்பி பாரதி பார்க் ரோடு, அவினாசிலிங்கம் பல்கலை வழியாக மேட்டுப்பாளையம் ரோடு வழியாக நகரை அடையலாம்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து, சங்கனுார் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் போலீஸ் செக்போஸ்ட் வழியாக காந்திபுரம் அடையலாம்.
அவிநாசி மேம்பாலத்திலிருந்து மரக்கடை சந்திப்பில் இடது புறம் திரும்பி டவுன்ஹால், உக்கடம் செல்லலாம். காந்திபுரத்திலிருந்து அழகேசன் ரோடு, தடாகம் ரோடு வழியாக மருதமலை அடையலாம்.
