Politics
காலை சத்துணவு திட்டம் காரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைப்பு
காஞ்சிபுரம், செப். 12– காலை சத்துணவு திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் நேற்று சோதனை ஓட்டமாக தொடங்கி
காலை சத்துணவு திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் நேற்று சோதனை ஓட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில், 537 பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை, காலை சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் இருந்து, நடுநிலைப் பள்ளிகள் வரையில் படிக்கும் மாணவ – மாணவியருக்கு காலை சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, 130 நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 116 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என, 246 பள்ளிகளில், காலை சத்துணவு திட்டம் நேற்று முதல் சோதனை ஓட்டமாக விரிவுபடுத்தப்படுத்தப்பட உள்ளன.
இதன் மூலமாக, 26 ஆயிரத்து 40 மாணவ – மாணவியர் பயன் பெறுவார்கள் என, துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதன் சோதனை ஓட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. காரை உயர்நிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி மாணவ – மாணவியரிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். அதேபோல, தேவரியம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில், காலை சத்துணவு வழங்கும் சோதனை திட்டத்தை, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தொடங்கி வைத்தார்.