Politics
இடைத்தேர்தலில் பா.ம.க., யாருக்கு ஆதரவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்: அன்புமணி தகவல்

திண்டிவனம்: ‘கூட்டணியில் இருந்து கொண்டே கம்யூ., கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குழப்பமாக உள்ளது’ என்று பா.ம.க.,தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள, பெரியார் சிலைக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அரசியல் பயிலரங்கில் இட ஒதுக்கீட்டு தியாகிகள், உருவப்படங்களுக்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:
நீண்டநாள் கோரிக்கையான சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். மத்திய அரசு, இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறோம். இட ஒதுக்கீடு போராட்டத்தால் தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒதுக்கீடு பெறப்பட்டது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பா.ம.க.,யாருக்கு ஆதரவு என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும்.
முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பது அவசியமில்லை. இதையே முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் செய்தார்.
வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தவேண்டும். தனியார் நிறுவனங்களில், 80 சதவீத வேலைவாய்ப்பை, உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுக்கவேண்டும். எந்த பொதுத்துறையிலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
தி.மு.க.,வை விமர்சிக்கும் த.வெ.க., அரசு அவர்கள் செய்ததற்கு எதிராக செய்யவேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே கம்யூ.,கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குழப்பமாக உள்ளது. தி.மு.க.,வின் ஊழல்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சட்டசபையில் பேசினால் மட்டும் போதாது. பணமில்லா பரிவர்த்தனை குறித்த மத்திய அரசு முடிவை கைவிடவேண்டும்.
சூப்பர் எல் நினோவால் அதிகளவு வெப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. 36 மெகாவாட் மின் உற்பத்தி இருந்தால் தான் மின் தடை ஏற்பட்டுள்ளது அரசின் தோல்வி.
கடந்தாண்டு, 6.5 ஏக்கர் குறுவை சாகுபடி செய்த நிலையில், இந்தாண்டு 1.5 லட்சம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். மெத்தனமாக செயல்படக் கூடாது.
மாதம் ஒருமுறை பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தலைமைப்பண்புடன் பெண்களுக்கு மரியாதை கொடுத்து நடந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.