Politics
இடைத்தேர்லில் த.வெ.க., வெற்றிக்காக காங்கிரஸ் நிர்வாகிகள் பணிபுரிவர்; சொல்கிறார் காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: ''மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடது சாரி கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தராமல் இருந்தாலும் த.வெ.க., வெற்றிக்காக காங்., நிர்வாகிகள் பணிபுரிவர்,'' என, விருதுநகரில் காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பால் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும். ஊழலுக்கு எதிராக ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஊழல் குற்றச்சாட்டுகளால் தோற்கடிக்கப்பட்டது. தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் அவசியம். ஆனால் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படும் பட்டினபாக்கம் மீனவர்கள் வாழும் பகுதியாக இருப்பதால் முதல்வர் விஜய் நாடு திரும்பியதும் மக்கள் நலனை பாதுகாத்து புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கையும், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு உள்ளது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் புதிதாக தொழிற்சாலைகள் அமைக்க முடியவில்லை. ஆந்திராவில் எந்த வளத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அதனால் தொழிற்சாலைகள் அங்கு செல்கிறது.
கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததால் மின்தடை பிரச்னை ஏற்பட்டது. தற்போது அப்பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு எவ்வித பிரச்னையும்ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை அரசு போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும் என்றார்.