Politics
'எந்தப் பின்னடைவும் வராது...'-செங்கோட்டையன் உறுதி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுக்கும் ஆதரவு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''எங்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாகப் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் வராது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)