குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்:நரிக்கட்டியூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அருகே நரிக்கட்டியூர் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள் உள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நிறு-வனங்களில் பணி
செய்து வருகின்றனர். மேலும், தொழிற்-பேட்டை, சணப்பிரட்டி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்கள் நரிக்கட்டியூர் பிரதான சாலை
வழியாக செல்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியு-மாக
உள்ளது.
குறிப்பாக, சில இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து,
போக்குவ-ரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், போதிய
தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியு-மான
சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர். புதிய
தார்ச்சாலை அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.