Religion
பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலையில் பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ண அவதாரத்தில் எழுந்தருளினார். தீப ஆராதனைகள் நிறைவடைந்து இரவு 8:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப் பட்டார்.
தொடர்ந்து கோயில் முன்பு உறி அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரத வீதிகளில் பெருமாள் வலம் வந்தார்.
காளிதாஸ் பள்ளிக்கூட தெருவில் பால், தயிர், வெண்ணை மற்றும் தேங்காய் கட்டி கிருஷ்ணர் வேடமிட்டவர் உறி அடித்தார்.
பின்னர் அனைத்து பகுதிகளிலும் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டு இரவு 11:30 மணிக்கு திருக்கோயில் அடைந்தார்.
அப்போது முக்கிய வீதிகளில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.