கல் குவாரி லாரிகளால் அருங்குன்றம் சாலையில் பள்ளம்
அருங்குன்றம், செப். 10– அருங்குன்றத்தில் கல் குவாரி லாரிகளால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன

அருங்குன்றத்தில் கல் குவாரி லாரிகளால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளின் விபத்திற்குள்ளாகின்றனர்.
திருமுக்கூடல் – சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் பேருந்து நிறுத்தம் உள்ளது. அருங்குன்றம், பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர், பட்டா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் இச்சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று வருகின்றனர்.
அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மூலம் இச்சாலை பகுதி அடிக்கடி சேதமாகிறது.
குறிப்பாக அருங்குன்றம் பேருந்து நிறுத்தம் எதிரிலான சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளத்தில் அடிக்கடி மண் கொட்டி சமன் செய்தாலும் மீண்டும் ஒரிரு நாட்களில் பழுதடைந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் இச்சாலை வழியில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.
எனவே, அருங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை கான்கிரீட் மூலம் சீரமைத்து பயன்பாட்டிற்கு விட அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.