மண் அரிப்பால் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் திணறல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரதான சாலையில், மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக மின் நகர், ஆனந்தாபேட்டை, மாமல்லன் நகர், சின்ன காஞ்சிபுரம், ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், அருந்ததியர் நகரை ஒட்டியுள்ள மஞ்சள்நீர் கால்வாய் அருகில், சாலையின் மையப் பகுதியில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, மண் அரிப்பால் சேதமடைந்துள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.