Religion
அரிஸ்டோ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி
கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் கஸ்துாரி, பள்ளி தலைவர் சிவக்குமார், முதல்வர் மதுர பிரசாத் பாண்டே மழலையர்களை வாழ்த்தினர். மழலையர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அனைவரையும் கவர்ந்தனர். மழலையர்கள் பக்தி பாடல்கள் பாடியும், பாரம்பரிய நடனமாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.