Politics
இரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்; இபிஎஸ் நம்பிக்கை

சென்னை: நடைபெற இருக்கும் இரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் பேசியதாவது; அனைத்து மக்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். இந்த இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உண்டு.
முதல்வர் விஜய் லண்டனில் இருந்து வந்த பிறகு தான், தமிழக அரசு ஈர்த்த முதலீடுகள் குறித்து தெரிய வரும். தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதாக பத்திரிகை மற்றும் அரசு செய்திக் குறிப்பில் செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் முழு செய்தி வரவில்லை. அது வெளியே வந்த பிறகு தான் அனைத்தும் தெரிய வரும், இவ்வாறு அவர் கூறினார்.