Crime, law and justice
காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பலி: மனிதாபிமானமற்ற செயல்; உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! பிரேமலதா

காஞ்சிபுரம் அருகே தாய், சேய் பலியான விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கருத்து...
காஞ்சிபுரம் அருகே பிரசவ வலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் மர வியாபாரி தடுத்ததால் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடி வாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி(35). காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனா். அவா்கள் பணிபுரிந்த மரக்கிடங்கு உரிமையாளரான ஆறுமுகத்திடம் ரூ. 20,000 கடனாகப் பெற்றிருந்தனா்.
தேன்மொழிக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கடை உரிமையாளர் மறுத்துவிட்டதால் தங்கியிருந்த இடத்திலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் தாயும், சேயும் உயிரிழந்தனா். கடனை கட்டிவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல அந்த கடை உரிமையாளர் கூறியதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடா்பாக தேன்மொழியின் உறவினா்கள் பொன்னேரிக்கரை போலீஸாரிடம் புகாா் செய்ததன் பேரில் கணவா் ஆனந்தனிடமும், மரக்கிடங்கு உரிமையாளா் ஆறுமுகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் தொடா்பாகவும் பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
"காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த தேன்மொழி என்ற ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, அவர் மற்றும் அவரது கணவர் ஆனந்தன் ஆகியோர் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த 20,000 ரூபாய் முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் இந்தச் செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மேலும், உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®£à®¿à®ªà¯ பà¯à®£à¯ மறà¯à®±à¯à®®à¯ பà®à¯à®à®¿à®³à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯ à®à®¯à®¿à®°à®¿à®´à®ªà¯à®ªà¯ à®à®®à¯à®ªà®µà®®à¯ மனிதாபிமானமறà¯à®± à®à¯à®¯à®²à®¿à®²à¯ à®à®à¯à®ªà®à¯à®à®µà®°à¯à®à¯à®à¯ à®à®à¯à®à®ªà®à¯à® தணà¯à®à®©à¯ வழà®à¯à® வà¯à®£à¯à®à®¿ à®à®±à®¿à®à¯à®à¯!#dmdk pic.twitter.com/1hMl8XoEJy
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) September 10, 2026
Premalatha comments on incident near Kanchipuram where a mother and her newborn died
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.