Crime, law and justice
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.25ல் உசிலம்பட்டியில் துவக்கம்
விருதுநகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டமான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான அரசாணை ஜூன் 22ல் வெளியானது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்.15ல் திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் விஜய் செப்.10ல் லண்டன் செல்ல உள்ளதால் செப்.17ல் முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்டத்துடன் ஒன்றாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவங்க திட்டமிடப்பட்டது.
முதல்வர் லண்டன் பயணம் முடித்து வருவதற்கு தாமதாகும் என்பதால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போகும் நிலை உ ருவானது.
தற்போது செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் துவங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
