Religion
குட்டீஸ்கள் அசத்தல்
பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு பஞ்சோரா ஸ்ரீ மாரியம்மன் கோவில் கமிட்டி சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கோவில் கமிட்டி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
சந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஜெயந்தி, முனியம்மாள் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், கிருஷ்ணர் , ராதை வேடமணிந்த குட்டீஸ்கள் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர், ராயல் கேர் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து குட்டீஸ்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கிராம மக்கள், சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.