Economy, business and finance
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லுமா?
கரூர்:அமராவதி அணையில் இருந்து ஆற் றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, நேற்று குறைக்கப்பட்டது. இதனால், கடைமடை
அணையில் இருந்து ஆற் றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, நேற்று
குறைக்கப்பட்டது. இதனால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லுமா என்ற
கேள்விக்குறி எழுந்துள்ளது.
அமராவதி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு ஆற்றில், கடந்த ஆக., 30ல்
வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக
தண்ணீர் திறக்க வேண்டும் என, கடந்த, 1ல் சின்னதாராபுரம்
ஒத்தமாந்துறையில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மற்றும் விவசாயிகள்
சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஆற்றில் திறக்கப்பட்ட
தண்ணீரின் அளவு வினாடிக்கு, 2,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த, 30 முதல் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட
தண்ணீர், நேற்று முன்தினம் மாலை கரூர் அருகே உள்ள, சின்னதாராபுரம்
பகுதிக்கு வந்தது.
செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என, விவசாயிகள்
எதிர்பார்த்தனர். ஆனால், தண்ணீர் வரவில்லை. இந்நிலையில், அமராவதி
அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, நேற்று காலை,
1,667 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடை பகுதியான
திருமுக்கூடலுார் வரை, தண்ணீர் செல்லுமா என்ற கவலை,
விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.