Economy, business and finance
ஒத்தமாந்துறைக்கு வந்தது அமராவதி அணை தண்ணீர்
கரூர்,:அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று மாலை சின்னதாராபுரம் அருகே ஒத்தமாந்துறை பகுதிக்கு வந்தது.
மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 30 முதல்
ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் வினாடிக்கு, 1,000 கன
அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி
அமராவதி அணையில் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு,
2,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கரூர் அருகே உள்ள, சின்னதாராபுரம் ஒத்தமாந்துறை பகுதிக்கு தண்ணீர்
வந்தது. இன்று காலை, கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வந்து
சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.