Religion
பொள்ளாச்சி, ஆனைமலையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலையில், 145 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பொள்ளாச்சி, வால்பாறை கோட்டத்தில், 530 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சிலைகள் நேற்று முன்தினம் முதல் ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்படுகின்றன. நேற்று பொதுமக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 114 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஆனைமலையில் ஹிந்து அமைப்புகள் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட 31 சிலைகள், ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கிணத்துக்கடவில் ஹிந்து அமைப்பு சார்பில், - 31 சிலைகள், பொது மக்கள் சார்பில், 9 என, 40 சிலைகள், ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதே போன்று நெகமம் சுற்றுப்பகுதியில், ஹிந்து அமைப்பு சார்பில் 20, மக்கள் சார்பில் 11, என, மொத்தம் 31 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன.