Religion
பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
உடுமலை: உடுமலை ராஜலட்சுமி கெங்குசுவாமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி சார்பில், கிருஷ்ணஜெயந்தி சிறப்பு விழா ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்தது.
பள்ளி முதல்வர் டாக்டர் சகுந்தலா தலைமையில், மாணவர்களின் கிருஷ்ணர் வேடப் போட்டி, புதிர்கள், பாடல் நிகழ்ச்சிகள், பானை–பந்து விளையாட்டு, கே.ஜி., வகுப்பு குழந்தைகளின் நடனம், நாடகம், கிருஷ்ண உபதேசம் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாக்களை ஏற்பாடு செய்த ஆசிரியர்களையும், மாணவர்களையும், உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா உள்ளிட்டோர் பாராட்டினர்.