வடிகால் வாய்க்காலில் செடிகள்; சாலையில் நீர் ஓடும் அபாயம்

கரூர்; கரூர் அருகே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால் மழை பெய்யும்போது, திருச்சி சாலையில் தண்ணீர் ஓடும் அபாயம் உள்ளது.
கரூர் - திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதி, கொளந்தானுார் சாலையில், மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரை பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மரும், மின் கம்-பங்களும் உள்ளன. இந்நிலையில், மழை நீர் வடிகால் வாய்க்காலில் அதிகளவில், செடி கொடிகள் முளைத்துள்ளது.
பல மாதங்களுக்கு முன், கொளந்தானுார் பகு-தியில் மழை பெய்த பொது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என, கொளந்தானுார் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், துார் வாரப்படவில்லை. வரும் நவம்பரில் புயல் கார-ணமாக, அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்-ளது. கொளந்தானுார் பகுதியில் கால்நடை பராம-ரிப்பு துறை அலுவலகம், கால்நடை மருத்துவ-மனை, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏரா-ளமான வீடுகள் உள்ளன.
வரும் நாட்களில் கரூர் நகர் மற்றும் கொளந்-தானுார் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் போது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் மீண்டும் தண்ணீர் ஓடும் அபாயம் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.