வியாபாரிகளுக்கு கடன் முகாம்
பெருந்துறை;பெருந்துறை நகராட்சி எல்லையில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமரின்
நகராட்சி எல்லையில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை
மேம்படுத்த, பிரதமரின் சுவநிதி திட்டத்தில், வங்கிகள் மூலம் கடன்
வழங்கும் முகாம், பெருந்துறை நகராட்சி அலுவலகத்தில் கடந்த, 1ம் தேதி
தொடங்கியது.
30ம் தேதி வரை முகாம் நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ள
வரும் வியாபாரிகள் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை,
தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம்,
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப
அட்டை நகலை கொண்டு வர வேண்டும்.