Religion
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
செப். 18கோயில் * கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி, புரட்டாசி
* புரட்டாசி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: மைய செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
* எல்.ஐ.சி., நிறுவனத்தில் தொழில் வளர்ச்சி குறித்து முன்னாள் மாணவர் உரை: அண்ணா பல்கலை மண்டல வளாகம், மதுரை, முன்னிலை: துறைத் தலைவர் முத்து வேலாயுதம், சிறப்பு விருந்தினர்: தேனி மாவட்ட எல்.ஐ.சி., வளர்ச்சி அலுவலர் ரத்தீஷ் வேல்குமரன், ஏற்பாடு: மேலாண்மை துறை, காலை 9:30 மணி.
* நிலையான எதிர்காலத்திற்கான உருமாற்றமளிக்கும் ஆராய்ச்சி: நானோ தொழில்நுட்பம் மற்றும் திறன்மிகு தொழில்நுட்பங்கள் மூலம் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் - சர்வதேச கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, முன்னிலை: கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி, செயலாளர் இக்னேஷியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்: அமெரிக்காவின் பீஸ் நிறுவன தலைவர் சோனியா, இயக்குநர் காந்திமதி, காலை 10:00 மணி.
* தென்னிந்தியாவின் பிரீமியர் வேளாண் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையம், ரிங் ரோடு, மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் நிர்மல் குமார், வினோத், பிரபு, ஏற்பாடு: யுனைடெட் டிரேடு பேர்ஸ் இந்திய நிறுவனம், காலை 10:00 மணி.
* முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவியருக்கான தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து, மேஜைப்பந்து, ஸ்பீடு ஸ்கேட்டிங், ஹாக்கி, சிலம்பம், கபடி, யோகா, வாலிபால், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.