பெண் கேட்ட வாலிபர் மீது கொதிக்கும் எண்ணெய் வீச்சு

காவேரிப்பாக்கம்: பெண் கேட்க சென்ற கோகுல கண்ணன், 19, மீது, இளம்பெண்ணின் தாய் முகமது தமீன், 40, என்பவர், கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த, 18 வயது இளம்பெண், 10ம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்தார்.
நெமிலி அடுத்த, ஆயர்பாடியை சேர்ந்த கோகுல கண்ணன், காஞ்சிபுரம் தனியார் கல்லுாரியில் படிக்கிறார்.
இளம்பெண்ணை காதலித்த கோகுல கண்ணன், இளம்பெண்ணின் தாயிடம் பெண் கேட்டுள்ளார். அவர் மறுத்தும், தொடர்ந்து பெண் கேட்டதால், ஆத்திரமடைந்த பெண்ணின் தாய், கோகுல கண்ணன் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். காவேரிப்பாக்கம் போலீசார், முகமது தமீன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.