சாமந்திபுரம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
சித்தாமூர், செப். 12– சாமந்திபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால், வாகன
சாமந்திபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சித்தாமூர் அடுத்த சாமந்திபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஜமீன் எண்டத்துார் – விளங்கனுார் இடையே 5 கி.மீ., நீள தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஒழவெட்டி, சாமந்திபுரம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதி மக்கள் சித்தாமூர், பவூஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சாமந்திபுரம் – மருவளம் இடையே 700 மீட்டர் நீள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி தடுமாறுகின்றனர். அவ்வப்போது, இருசக்கர வாகனங்கள் பழுதடைவதால், அந்த சாலையில் செல்வதை தவிர்க்கின்றனர். இப்பகுதியை சுற்றி இயங்கும் கல்குவாரி லாரிகள், இவ்வழியே செல்வதால், சாலை சேதமடைய காரணம் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.