TN Assembly Live Updates | ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்வு? சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.!
Tamil Nadu Assembly Live Updates | தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் நேரலை அப்டேட்கள் உடனுக்குடன்...
ஆட்டோ கட்டணம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிய ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவதை உறுதி செய்யவும் நடவடிக்கை – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
எங்களின் கோரிக்கை மத்திய அரசும் மாநில அரசும் ஒன்று சேர்ந்து BC MBC பிரிவுகளில் SC STக்களுக்கு உள்ளது போல் மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கிடு கொடுத்து வருகிறோம். எந்த சாதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. எந்தி சாதியில் பெண்கள் படிப்பு அறிவு இல்லாமல் உள்ளனர். சமூக நீதி கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்வோம். மத்திய அரசிற்கு எங்களுக்கு கோரிக்கை உள்ளது. அந்தெந்த மாநிலங்களுக்கு ஏற்ற வாறு சாதி வாரி கணக்கெடுப்பு இருக்கும். சமூக நீதி என்றால் சம மரியாதை கொடுப்பது என நினைத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சமத்துவமான வாய்ப்பு கொடுப்பது தான் சமூக நீதி – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
இந்த அவையில் சமூக நீதிக்காக குரலை கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல முன்னாள் பிரதமர் நேரு சமூக நீதிக்காக போராடி உள்ளார். 1978 பீகார் முதலமைச்சர் தாக்கூர் மற்றும் முன்னாள் பிரதமர் விபி சிங் ஆகியோர் சமூக நீதிக்காக தனது முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளனர். ஒன்றிய அரசின் புரிதலுக்கும் தமிழக அரசின் புரிதலும் வேறு வேறு. 1931 வரை சாதி வாரி கணக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் முன் எடுத்தனர். தமிழ்நாட்டில் பெரியார் அண்ணா காமராஜர் போராடி உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது ஏன் அவசியம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா




